கர்நாடக மாநிலத்தின் சிந்தாமனி நகரில் வசிப்பவர் ஹசினா, இவர் குடும்ப கட்டுப்பாடு செய்ய அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உடனடியாக அருவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுரை வழங்கியதை அடுத்து கனவரின் ஒப்புதல் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அருவை சிகிச்சை அரங்கிற்கு சென்ற ஹசினாவை கிருஷ்னா கிருஷ்ணா என கூறுமாரு மருத்துவர் பனித்துள்ளார் அதற்க்கு ஹசினா நான் ஒரு இஸ்லாமிய பெண் என்றும் என்னால் அல்லாஹ்வை தவிர வேறு கடவுளை ஏற்றுக் கொள்ள இயலாது என போராடி உள்ளார்.
விடாபிடியான மருத்துவர் கிருஷ்ணா வை கூறினால் தான் அறுவை சிகிச்சையை ஆரம்பிப்பேன் என அழுத்தம் கொடுத்துள்ளார்.
முன்னதாக மயக்க மருந்து கொடுத்து அரை மயக்கத்தில் இருந்த ஹசினா வேறு வழியின்றி மருத்துவரின் கட்டளையை நிரைவேற்றியாதாகவும் இது போன்று சிந்தாமணி அரசு மருத்துவமனையில் ஒருமத கோட்பாட்டை அனைவரும் கடைபிடிக்க மருத்துவர்கள் உத்தரவிடுவதாக ஹசினா குற்றம்சாட்டியுள்ளார்.