

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிரையில் திமுகவின் கட்சி பணிகளை அதிரை முன்னாள் சேர்மனும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம் முடுக்கிவிட்டுள்ளார். குறிப்பாக நகராட்சி அலுவலகம் எதிரில் புதியதாக மாவட்ட பொருளாளர் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரை திறந்து வைத்த நிலையில், அந்த அலுவலகத்திற்கு தேடி வரும் மக்களுக்கு அரசு சார்ந்த பணிகளையும் அவர் செய்து கொடுக்கிறார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் சேக் தாவூத் தலைமையில் கீழத்தெரு முன்னாள் ஜமாத் தலைவர் தாஜுதீன், முகம்மது கனி, நெய்னா முகம்மது பாபுகான், பைத்துல் ரஹ்மான், சேக் முகம்மது உள்ளிட்ட 28 பேர் மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் செய்திருந்தார்.