தமிழ்நாட்டில் கடந்த வாரம் 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி ஆய்வில் ரூ.33லட்சத்திற்கும் மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் வரவேற்பு தெரிவித்தார்.
இந்நிலையில் அதிரையில் இயங்கி வர கூடிய நகராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக அதிகாரிகள் தற்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அதிரை மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே புதிய வரி உள்ளிட்ட அரசு சேவைகளுக்கு லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் குறித்து +91 44 22321090 / 22321085 / 22310989 / 22342142 ஆகிய தொலைப்பேசி எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இதில் சிறப்பு என்னவெனில் புகார் அளிப்போரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆதலால் லஞ்சம் கேட்போர் குறித்து தைரியமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.