ADIRAI BEACH CRICKET CLUB மற்றும் DIYWA இணைந்து நடத்திய 28ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் திருச்சி சமயபுரம், தேனாங்காடு, பட்டுக்கோட்டை, கோட்டைக்காடு, ராஜாமடம், ஆம்பலாப்பட்டு மற்றும் அதிரையைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றன.
இதில் நேற்று மாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ABCC அணியும், ASC அணியும் மோதின. இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ABCC அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
முதல் பரிசு : ABCC – ரூ. 25,000 + சுழற்கோப்பை
இரண்டாம் பரிசு : ASC – ரூ. 17,000 + சுழற்கோப்பை
மூன்றாம் பரிசு : RCC ராஜாமடம் – ரூ. 11,000 + சுழற்கோப்பை
நான்காம் பரிசு : ASK அதிரை – ரூ. 7,000 + சுழற்கோப்பை
நான்காம் பரிசு : ROLEX பட்டுக்கோட்டை – ரூ. 7,000 + சுழற்கோப்பை
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகளும், 22வது நகர்மன்ற உறுப்பினர் செய்யது முஹம்மது ஆகியோர் பரிசுத்தொகையையும், சுழற்கோப்பையையும் வழங்கினர்.

















