உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணமாக வைத்து தான் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றிய எதார்த்த உண்மைகளை மறைத்து முதல்வருக்கு சாதாரண காய்ச்சல் என்று மக்களை நம்ப வைக்க மீடியாக்களுக்கு பொய் அறிக்கை தந்தோம் என்று அப்பல்லோ மருத்துவமனை பிரதாப்ரெட்டி தற்போது வாக்கு மூலம் தந்திருப்பதை ஊடகங்களில் சமூகவலைதளங்களில் காண முடிகிறது
இயற்கையாக ஒரு தலைவருக்கு நோய் நொடிகள் ஏற்பட்டால் கூட ஏதோ அவர் எதிர்கட்சியினரின் சூழ்ச்சியாலும் வன்முறையாலும் தான் பாதிக்கப்பட்டார் என்று நினைத்து கொண்டு அரசாங்க சொத்துக்களை நாசமாக்குவது வன்முறையில் ஈடுபடுவது போன்ற மடமைத்தனங்கள் நம் நாட்டு மக்களிடம் குடி கொண்டிருப்பதால் இவ்வாறு அறிக்கை தருவது அச்சூழ்நிலைக்கு ஏற்றது என்பதை நாம் மறுப்பதற்க்கு இல்லை
துவக்கத்தில் இவ்வாறு பொய்களை நல்ல நோக்கத்தில் கூறினாலும் அதன் எதார்த்த உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும் ஆனால் முன்னால் முதல்வரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததை மூடி மறைத்து விட்டு நாளுக்கு நாள் அவர் முன்னேறி வருகிறார் முன்னேறி வருகிறார் என்று குழந்தைகள் கண்களால் காணாமல் வாய்ப்பாடு ஒப்புவிப்பதை போல் அந்த கட்சியை சார்ந்தவர்களும் எதிர் கட்சியை சார்ந்தவர்களும் மருத்துவமனை அதிகாரிகளும் அரசாங்கமும் ஒன்று சேர்ந்து எழுபது நாட்களாக ஒரே மாதிரியான பொய்யான தகவலை தந்து மக்களை நம்ப வைத்து இறுதியில் முதல்வரை இறந்து போன உடலாக தந்தது தான் மிகப்பெரிய துரோகம்
இதை விட மிகப் பெரிய துரோகம் என்னவென்றால் முதல்வரின் மரணத்தை பற்றி பல விதமான சந்தேகங்கள் மக்கள் மனதில் தோன்றிய போது அதற்க்கு விளக்கம் சொல்கிறோம் என்ற பெயரில் மீடியாக்கள் பல சிந்தனைவாதிகளை அரசியல் புள்ளிகளை அழைத்து வைத்து கொண்டு முதல்வர் நலமாகத்தான் உள்ளார் என்றும் அவரது உடல் நிலையை பற்றி பரவும் தகவல்கள் யாவும் பொய் என்றும் மறுப்புகளையும் விளக்கங்களையும் சமாதானங்களையும் பல நாட்களாக தந்தது தான் இந்த மாநில குடிமக்களுக்கு மீடியாக்கள் செய்த மிகப் பெரிய துரோகம் ஆகும்
இரும்பு பெண்மணி என்று பல அரசியல் அடிமைகளால் பாராட்டப்பட்டு வந்த ஒரு நாட்டின் முதல்வருக்கே இந்நிலை என்றால் இந்த நாட்டில் வாழும் அப்பாவி மக்களான நம் நிலை என்னவாகும் என்று யோசிப்பது குடி மக்களின் கடமையாக இருக்கின்றது
முதல்வரின் மரணத்தை பற்றி இன்னும் பல மர்மங்கள் வெளியே வந்தாலும் அதனாலும் ஒரு பலனும் ஏற்பட போவது இல்லை
காரணம் ஆட்சியும் அதிகாரமும் யாருடைய கைவசம் உள்ளதோ அந்த மத்திய மாநில அரசுகளால் தான் முன்னால் முதல்வரின் மரணம் தொடர்பாக இந்த குழப்பமே ஏற்பட்டுள்ளது
எனவே இந்த நிலை இருக்கும் போது தற்போது நடை பெற்று வரும் விசாரணையின் முடிவாலும் ஒரு தீர்வுமே கிடைக்க போவது இல்லை
கோடான கோடி பணத்தை லஞ்சமாக கொடுத்தும் இலவசமாக கொடுத்தும் பதவியை பெறும் இந்த அரசியல் அடிமைகளின் மூலம் ஒரு நியாயமும் கிடைக்கப்போவது இல்லை
அவ்வாறு கிடைக்கும் என்று எதிர் பார்த்தாலே நாம் அறிவீனர்களாக மாறி விடுவோம்
நட்புடன் J .இம்தாதி