
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஏரிபுரக்கரை ஊராட்சியில் சுமார் ரூ.4கோடியே 83லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு திட்டங்கள் துவக்க விழா நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்று பணிகளை துவக்கிவைத்தார்.
அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முக்கம் முதல் கீழத்தோட்டம் வரையிலான தார்சாலை பணி ரூ.3.52கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அத்தோடு ரூ.10லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடையும் ரூ.71லட்சம் மதிப்பீட்டில் ஏரிபுரக்கரை ஊராட்சி பள்ளிக்கு புதிய கட்டிடமும் கட்டப்பட இருக்கிறது. ஒரேநாளில் முத்தாய்ப்பாய் மூன்று திட்டங்களை பெற்று தந்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். முன்னதாக இந்த விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், திமுக மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், யூசுப், சென்னை அஸ்கர், பொறியாளர் புஷ்பராஜன், சேக்தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

