அதிரை எக்ஸ்பிரஸ்:- நாடு முழுவதும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள் குஜராத் மாநில தேர்தல் முடிவுகளே.காரணம் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டது.பலவேறு தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அறிவித்திருந்தன.
அப்படியிருக்கையில் சரியான நெருக்கடியை பாஜகவிற்கு காங்கிரஸ் கொடுத்துள்ளது.தன்னுடைய வாக்குசதவீதகத்தையும் அதிகப்படுத்தி இருக்கிறது.
தலித்செயற்பாட்டாளரும்,பாசிசத்திற்கெதிரான தன்னுடைய குரலை தொடர்ந்து பதிவு செய்தவருமான ஜிக்னேஷ் மேவானி குஜராத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 18,310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றுள்ளார்.இவருக்கு தொடர்ந்து அரசியல் ஆலோசணைகளை வழங்கியவர் தான் கௌரி லங்கேஷ்.
இவருடைய வெற்றிக்கு பல்வேறு பிரபல்யங்கள் தொடர்ந்து வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்.ஜிக்னேஷ் மேவானிக்கு SDPI கட்சி ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.