Home » பிரதமர் மோடி துவக்கி வைக்கும் அதிவிரைவு ரயிலை அதிரையில் மறிக்க திட்டம்?

பிரதமர் மோடி துவக்கி வைக்கும் அதிவிரைவு ரயிலை அதிரையில் மறிக்க திட்டம்?

by அதிரை இடி
0 comment

அதிராம்பட்டினத்து மக்கள் பன்னெடுங்காலமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தொழில் செய்து வருகிறார்கள். இவ்வூருக்கு ஆங்கிலேயே ஆட்சி காலத்திலேயே ரயில் வழித்தடம் அமைத்து முக்கியத்துவம் வழங்கியுள்ளது.

இவ்வூர் கடற்கரை தொழில் சார்ந்த ஊர் என்பதாலும் தேங்காய் உள்ளிட்ட விவசாய பொருட்கள் உற்பத்தியில் முன்னோடி நகரமாக விளங்கி வருகிறது. வேதாரண்யத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக உப்பு உற்பத்தி செய்யும் ஊராக அதிராம்பட்டினம் விளங்கியது.

இங்கு உற்பத்தியாகும் உப்பு உள்ளிட்ட விவசாய பொருட்களை பெருநகரங்களுக்கு எடுத்து செல்ல ஏதுவாக இந்த ரயில் வழித்தடம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தன.

இவ்வூர் மக்கள் உலகில் பலபகுதிகளுக்கு சென்று பொருளீட்டி அந்நிய செலவானியை அதிகளவில் அள்ளி தருகிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பட்டுக்கோட்டைக்கு அடுத்தப்படியாக அதிக வருவாயை ஈட்டும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிரையில் நிற்காது என்ற அறிவிப்பு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அகல ராயில்பாதை அமைத்த பிறகு பல சட்ட போராட்டங்களை சமரசமின்றி முன்னெடுத்து வெற்றிகண்ட ஊருக்கான உபத்திரத்தை செய்திருக்கிறது தென்னக ரயில்வே நிர்வாகம்.

இந்த நிலையில் தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளதாகவும் அந்த ரயிலின் அட்டவனையில் அதிராம்பட்டினம் நிறுத்தமில்லை என தெரிவிக்கிறது.

இதனால் அதிராம்பட்டினம் ரயில் உபயோக்கிப்பாளர்கள்,பொதுமக்கள்,வியாபாரிகள் ஒன்றிணைந்து பிரதமர் துவக்கி வைக்கும் இந்த ரயிலை அதிரையில் மறித்து போராட்டம் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter