தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(18/12/2017) பகல் 2மணிமுதல் கிரசெண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) அமைப்பு சார்பில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் விதை பந்து தூவும் விழா நடைபெற்றது.
இந்த விதை பந்து என்பது தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.இதன் மூலம்
ஒரு சிறிய காட்டையே உருவாக்கலாம்.
இன்று சுமார் 400க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விதை பந்துகள் தூவப்பட்டது.
இந்த விதை பந்து தூவும் விழாவிற்கு CBDயின் மாவட்ட துணை தலைவர் அக்லன் கலீஃபா(அதிரை கலீஃபா) அவர்கள் தலைமையில் , சுற்றுசூழல் மன்றம் 90.4 தலைவர் விவேகானந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இவ்விழா CBDயின் நகர தலைவர் இப்ராஹிம் அலி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விதைபந்து தூவும் நிகழ்வில் CBDயின் உறுப்பினர்களான அப்துல் மாலிக்,MST சிராஜ், அஸ்ரப் சமீர் அலி, அப்ரித், இர்ஷாத் அகமது, அபூபக்கர், இம்ரான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.