அதிரை புதுமனை தெருவில் இயங்கி வரும் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் வருகின்றன ஏப்ரல் 29ம் தேதி கல்வி வழிகாட்டி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எந்த துறைக்கு என்ன படிக்கலாம்? எப்படி படிக்கலாம் போன்ற கல்வி வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்க உள்ளனர். இந்த முகாமில் 9முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்று கல்வி வழிகாட்டுதல்களை பெற்று பயனடையுமாறு சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக கல்வி வழிகாட்டி முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் ஃபார்மை பூர்த்தி செய்து முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் முகாம் குறித்த சந்தேகங்களுக்கு +91 98403 14602, +91 96777 41737 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்புக்கொள்ளவும்.
சாதிக்க விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு : ஏப்ரல் 29ல் கல்வி வழிகாட்டி முகாம்!!
743
previous post