Home » சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் அதிரை அப்துல் ஜப்பார்! துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!

சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் அதிரை அப்துல் ஜப்பார்! துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!

by டோலோ டோலோ
0 comment

அதிராம்பட்டினம் நகரில் சமூக நலன் அடை மொழியுடன் ஊரில் நடக்கும் நிகழ்வுகளை காணொளியாகவும்,
குரல் வடிவிலும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருபவர் அப்துல் ஜப்பார்.

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், அரசியல் டைம்ஸ் என்கிற வாராந்திர இதழின் வாட்ஸ் ஆப் குழுமம் இவரை அக்குழுமத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது, இதனால் ஆத்திரமடைந்த அப்துல் ஜப்பார், சம்பந்தப்பட்ட இதழின் நிருபரை தொடர்பு கொண்டு அதன் ஆசிரியரை எழுத முடியாத வார்த்தைகளால் திட்டியும், இரு சமூகத்திற்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

இதனை கருத்தில் கொண்டு அவ்விதழின் செய்தி ஆசிரியர் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க கூறியதன் அடிப்படையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் அப்துல் ஜப்பார் தன்னை ஒரு நிறுவன பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்டு பல்வேறு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டு வருவது குறித்தும், குறிப்பிட்டு இருக்கின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் டைம்ஸ் இதழ் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter