505
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துவங்கின. முதலில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வழங்கப்பட்ட 5ஜி சேவை தற்போது படிப்படியாக நாடு முழுவதும் பிரதான நகரங்களுக்கு விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் அதிரையில் 5ஜி சேவையை துவக்கியுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் இன்டர்நெட் சேசையை கொடுக்கும் ஏர்டெல், அதிகபட்சமாக 434mbps வரை அதிவேக இணைய சேவையை வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.