Thursday, April 18, 2024

பைக்குகளில் வலதுபக்கம் சைலென்சர் – ஏன்

Share post:

Date:

- Advertisement -

மோட்டார் சைக்கிள்களில் பொதுவாக சைலென்சர் அமைப்பானது வலது பக்கமே பொருத்தப்படுகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது கிடைத்த சில தகவல்கள் இதோ….

●நூறாண்டுகளுக்கு மேலான தொழில்நுட்ப பாரம்பரியம் கொண்ட மோட்டார் சைக்கிள் கால ஓட்டத்தில் பல்வேறு புதுமைகளை சந்தித்துள்ளது. ஆனால், சைலென்சர் உள்ளிட்ட சில விஷயங்களில் அதிக மாற்றங்கள் இல்லை.

●மோட்டார் சைக்கிள் வரலாற்றை ஆராய்ந்தபோது, முதல் முதலில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் சைலென்சர் பொருத்துவதுதான் தயாரிப்பாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
●அதாவது, முதன்முதலில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் குறிப்பிட்ட வேகம் வரை பெடல்கள் மூலமாக மிதிவண்டி போன்று ஓட்டிச்செல்ல வேண்டும். குறிப்பிட்ட வேகம் வந்தவுடன், இன்ஜினில் இயங்கும். பெடல்கள் பொருத்தவேண்டியிருந்த சூழலால், வேறு வழியில்லாமல் இன்ஜினுக்கு கீழே சைலென்சரை பொருத்தினர்.

●இன்ஜினுக்கு கீழாக சைலென்சரை கொடுத்ததால், மோட்டார் சைக்கிளின் கிரவுண்ட் கிளியரன்ஸ் வெகுவாக பாதித்தது. இந்நிலையில், அடுத்த ஓர் ஆண்டிற்குள் முழுவதுமாக இன்ஜின் சக்தியில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை வடிவமைத்தனர்.

●பெடல்கள் எடுத்தவுடன் அதிக இடம் கிடைத்ததால், வலது பக்கம் சைலென்சரை பொருத்துவதே சிறந்தது என முடிவுக்கு வந்தனர். அதன்பிறகு, தரை இடைவெளி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், முதலாம் உலகப்போரில் இந்த வலதுபக்க சைலென்சர் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் பெரிதும் பயன்பட்டன.

●சில காலம் கழித்து, இரண்டு சிலிண்டர் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் இரண்டு சைலென்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன. மோட்டார் சைக்கிளின் இருபுறத்திலும் இந்த சைலென்சர்கள் கொடுக்கப்பட்டன. இதனால், எடை விரவல் அளவு சமமாக இருந்தது. அத்துடன், பார்ப்பதற்கும் மிகச்சிறப்பாக இருந்தது. இதைத்தொடர்ந்து, மீண்டும் மோட்டார்சைக்கிளுக்கு கீழே சைலென்சர் கொடுக்கும் வடிவமைப்பு முறையை சில நிறுவனங்கள் கையில் எடுத்தன.

● அதேநேரத்தில், இந்த இரட்டை சைலென்சர்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் வளைவுகளில் திரும்பும்போது, தரையில் உரசும் பிரச்னையை சந்தித்தன. குறிப்பாக, ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் இந்த பிரச்னை எழுந்தது. இந்நிலையில், கேடிஎம், டுகாட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் இன்ஜினுக்கு கீழ்பாகத்தில் சைலென்சரை கொடுக்கும் முறையை பின்பற்றுகின்றன. ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் இரண்டு பக்கங்களிலும் சைலென்சர்களை பொருத்துகின்றன. பல நிறுவனங்கள் வலதுபக்க முறையை பின்பற்றுகின்றன.

மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு முறையில் ஏராளமான மாற்றம் வந்துவிட்ட போதிலும், சில விஷயங்களில் மாற்றங்கள் செய்ய முடியவில்லை. அதில் ஒன்று சைலென்சர். எதிர்காலத்தில் சைலென்சர் எவ்வாறு மாறப்போகிறது என தெரியவில்லை. எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதால், சைலென்சர் அமைப்பு ஒழிந்துபோகும் வாய்ப்பும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...