Home » அதிரையில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளை!

அதிரையில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளை!

நன்றி அரசியல் டைம்ஸ்

by அதிரை இடி
0 comment

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் வசித்து வருபவர் சௌந்தரராஜன் (59) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நிலையில் ஓய்வு பெற்று சொந்த ஊரில் பெட்டிக்கடை ஒன்றை நடத்திவருகிறார்.

இவரது மனைவி ரேகா (45) நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்காக வெளியூர் சென்ற நிலையில் சௌந்தரராஜன் கடையில் இருந்துள்ளார். அவரது மகள் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள் இளம் பெண்ணில் கழுத்தில் கத்தியை வைத்து வாயை கட்டி பீரோல் சாவியை எடுத்து வரவேண்டும் இல்லையென்றால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

செய்வதறியாது நின்ற இளம்பெண் சாவியை கொடுக்க பீரோலில் வைத்திருந்து சுமார் 16.5 பவுன் தங்க நகை மற்றும் 9500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். அக்கம் பக்கம் கூச்சலிட்டு வெளியே ஓடிவந்த இளம்பெண் நடந்ததை தந்தையிடம் கூற சௌந்தரராஜன் காவல்துறையில் தெரிவிக்க உடனே சம்பவ இடத்திற்கு வந்த அதிராம்பட்டிணம் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter