அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்..
இன்றைய இந்திய அரசியல் சூழ்நிலை இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரும் சவால்களையும், சிரமங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அச் சவால்களுக்கும், சிரமங்களுக்கும் மத்தியில் இந்திய திருநாட்டில் நாமெல்லாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக நமது ஈமானை சிதைப்பதற்கு பலவித முயற்சிகளை சில விஷக் கிருமிகள் செய்து வருவதும் தொடர்கதையாகி கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்று நமது கண்மணி நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள். முழுமையாக நுழைந்து விடுதல் என்பது இஸ்லாத்தில் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. இஸ்லாமிய மதத்திற்கு என கடமைகள் கட்டுபாடுகள் என எல்லாம் வல்ல அல்லாஹ் விதித்திருக்கிறான்.
இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமாக மட்டுமல்ல அது நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது. மதங்கள் என்று எடுத்துகொண்டால் இந்து கிறிஸ்டின்,முஸ்லிம் என்று மட்டும் அல்ல எத்தனையோ மதங்களும் ஜாதிகளும்,கோட்பாடுகளும் நம் நாட்டில் உள்ளன.
ஆனால் இஸ்லாமிய வழிமுறை மட்டும்தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் ஒரு முன்மாதிரியாகவும் இருக்கிறது.அதை பின்பற்றியவர்களுக்கு எத்தனையோ சோதனைகள் வந்த போதிலும் இறுதியில் வெற்றியையே அடைந்திருக்கிறார்கள்.
பொதுவாக இஸ்லாமிய வரலாறுகளை எடுத்துக்கொண்டால் ஷஹாபாக்களின் வரலாறுகள் ,ஷஹாபா பெண்மணிகளின் வரலாறு தியாகங்கள் நபிமார்களின் வரலாறு தியாகங்கள் இவைகள் எல்லாவற்றிற்கும் பிறகு தான் நம்மை வந்தடைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
அப்படிப்பட்ட இஸ்லாத்தை நம் உயிருக்கும் மேலாக பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண்,பெண்கள் அனைவரின் மீதும் கட்டாய கடமையாக இருக்கிறது.
சமீபத்தில் பர்மாவில் நடந்த கொடூரம் நம் அனைவரும் அறிந்ததே. புத்த மதத்தை பின்பற்ற வைக்க அந்த மக்களுக்கு சொல்லெனாத் துயரங்களை புத்த பிக்குகள் ஆளாக்கினர். அந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்களுடைய மானங்களையும், ஈமானையும் பாதுகாக்க தமிழகத்திற்கும் வந்தனர். இப்பொழுது மியன்மாரில் ஒரே இடத்தில் ஆட்டுமந்தையைப் போல தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு பொருளுதவி செய்வதுபோல் சிலர் அவர்களிடம் (முஸ்லிம்களிடமிருந்து) உங்களுக்கு எந்த உதவியும் கிடையாது, உங்களுக்கு நாங்கள் தான் எல்லாமே என்று சொல்லி அவர்களுடைய ஈமானை குலைக்கும் வகையில் அவர்களிடம் ஆறுதலாக பேசி வருகின்றனர். ஆனால்அந்த மக்களுடைய உறுதியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
இஸ்லாமிய மதத்தை வெறும் மதமாக மட்டும் பார்க்கும் சில காவித் தலைவர்களின் சதியால் நம் பெண்பிள்ளைகளை வழிகெடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர். முக்கியமாக கல்விப்பயிலும் பருவமெய்திய பெண்களை குறி வைத்து அவர்களின் மனதை கெடுத்து வழிமாறி செல்ல மிகவும் உறுதுனையாக இருக்கிறார்கள்.
இதற்கென்றே மாணவர்களை உருவாக்கி அவர்களின் வறுமைக்கும் ,வாழ்க்கைக்கும் உதவுகிறோம் என்று சொல்லி அவர்களுடன் பழக வைத்து அவர்களின் வாழ்க்கையை சூறையாடுகின்றனர். அதையும் தாண்டி இஸ்லாம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கல்விப் பயில சென்றாலும் அல்லது அலுவலகப் பனியிடங்களுக்கு சென்றாலும் ஒழுக்கத்துடன் இஸ்லாமிய விதிகளைப் பேணி நடந்து கொண்டால் நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. நம்மை ஒருவராலும் மாற்றவும் முடியாது.
ஒவ்வொரு முஸ்லிமான பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்கள் வழிமாறி சென்றிடாமல் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு இஸ்லாமிய வரலாறுகளையும் இஸ்லாத்திற்காக நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.
1400 ஆண்டுகளுக்குப் பிறகும் இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான் ஆதிக்கத்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. உலகத்தில் வேறு எந்த மதங்களிலும் ஏன் வேதங்களிலும் காண முடியாத பல அற்புதங்களையும் உலக அறிவியலையும் செவ்வென சொல்லிக் கொண்டிருக்கிறது.
இஸ்லாம் மட்டும் தான் வாழ்க்கையுடன் மார்க்கத்தை ஒப்பிட்டு கூறுகிறது. இதை சூழ்ச்சியாளர்களால் பொருத்துக்கொள்ள முடியாமல் தான் மாணவர்களின் மனதை வழிகெடுத்து வழிமாறி செல்ல முயற்ச்சி செய்கிறார்கள்.
இஸ்லாம் என்றால் அமைதி, கண்ணியம், ஒற்றுமை, தர்மம், அன்பு காட்டுவது தவறுகளை மன்னிப்பது, இன்னும் எத்தனையோ நற்பண்புகளை போதிக்கிறது. இதை புரிந்தும் தெரிந்தும்ஆராய்ந்தும் தான் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று பலர் இனைகிறார்கள்.
இஸ்லாம் என்றால் போர் [ஜிஹாது] தீவிரவாதம் என்று சொல்லி மக்கள் மனதில் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள் சில கேடுகெட்ட ஆட்சியாளர்கள். அதற்க்கு இப்பொழுது மிகவும் மும்முரமாக சதிவலைகள் பின்னப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் நாமெல்லாம் பத்திரிக்கையிலும் முகநூளிலும் அறிந்த செய்தி நம்மை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காவித் தலைவர்கள் லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் பெண்களை மதம் மாற வைத்து திருமணம் செய்து வைப்போம் என்று சவால் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் கூட இஸ்லாத்தின் புனிதத்தன்மையை உணர்ந்து மிகவும் பொறுப்புடனும் ,சகோதரத்துடனும் நடந்து கொள்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது ஈமானுடன் பிறந்து வளர்ந்து அற்ப காதலுக்காக இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு செல்வதென்பது மிகவும் வேதனைக்குறிய விஷயமாகும். அது தற்கொலை செய்வதை விட கொடுமையானது, இம்மையிலும் துன்பத்திற்கு ஆளாகி,மறுமையிலும் துன்பப்பட வேண்டிய சூழ்நிலை வரும்.
அதற்கெல்லாம் வழிவகை இல்லாமல் ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்கும் பாக்கியத்தை உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ் தந்தருளட்டும் என்ற துஆவோடு இக் கட்டுரையை நிறைவு செய்து, வேறொரு தலைப்பில் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்… இன்ஷா அல்லாஹ்..!
ஆக்கம்,
உம்மு ஆக்கிஃபா,
அதிரை.