Home » புகைத்தலைப் பகைத்திடு

புகைத்தலைப் பகைத்திடு

0 comment

வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;
விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்);
மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;
நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி;
புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி

உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;
குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;
சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக் கேடு;
மற்றவர்க்கு நோய்தருதல் மாபெரும் சாபக்கேடு..!!!

உன்னை வளர்த்த உயர்வான சமூகத்திற்கு
உன்னால் தரப்படும் ஒழுக்கமற்ற துரோகத்திற்கு
என்ன தண்டனை என்ற போதே
உன்னை நீயே உருக்குலைப்பது போதுமே…!!!!

இதழ்முத்தம் உனக்கு இனிமேல் எட்டாது;
முதலிரவில் மனைவி முகமும் கிட்டாது
இதைவிடத் தண்டனை ஏற்குமா நெஞ்சே
விதைவிட முன்னே விரட்டிடு நஞ்சை

தோலில் சுருக்கம்; தோல்விகள் தொடர்தல்;
பாலில் நஞ்சுபோல் பார்வைக்கு தெரியாமல்
ஒவ்வொரு இழுப்பும் உயிரின் இழப்பு
ஒவ்வொரு நெருப்பும் உடலினைக் கருக்கும்

“கவியன்பன்’, கலாம்

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter