Home » ராஜா மீது வழக்குப்பதிவு செய்க! அதிரை காவல் துறைக்கு வலியுறுத்தல்!!

ராஜா மீது வழக்குப்பதிவு செய்க! அதிரை காவல் துறைக்கு வலியுறுத்தல்!!

by அதிரை இடி
0 comment

அதிரை மெயின் ரோட்டில் ARDA வுக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை சுற்றுச்சுவர் கட்டுமானப் பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்த உள்ளூர் ஊடகமான அதிரை எக்ஸ்பிரசின் செய்தியாளர் முஹம்மது சாலிஹை நோக்கி அடிக்க பாய்ந்து, தகாத வார்த்தைகளால் ஒருமையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் நகராட்சி திமுக கவுன்சிலர் கிருத்திகாவின் கணவர் ராஜா.

ஏற்கனவே “அதிரையில் ஆக்கிரமிப்பு புகாரை மத சிக்கலாக மாற்றும் ஆளுங்கட்சி கவுன்சிலர்!” என்ற பெயரில் அதிரை எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முஹம்மது சாலிஹை ராஜா மிரட்டி உள்ளார். துணைத் தலைவர் இராம.குணசேகரன், நகராட்சித் தலைவரின் கணவர் MMS அப்துல் கரீம், திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தை அதிரை பிரஸ் புரொடொக்சன் கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர் முஹம்மது சாலிஹ் காவல் நிலையத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் புகாரளித்து உள்ளார். புகாரளித்து ஒருவாரத்துக்கு மேலாகியும் அவரது புகார் மீது அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. ஜனநாயகத்தின் 4வது தூணாக இருக்கும் பத்திரிகை துறையை காக்க அவர்களுக்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும். எனவே முஹம்மது சாலிஹின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter