829
கடற்கரை நகரான அதிரையில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பம் முதலே அதிகமாக உணரப்பட்டது. இதன் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை பெரும்பாலும் பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உச்சப்பட்ச வெயில் இன்று 107.6 ஃபேரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அதிகபட்ச வெப்பம் மே மாதத்தில் 105.8 ஃபேரன்ஹீட் ஆகும். அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பிறகு அதிரையில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச வெப்பம் பதிவாகி இருப்பதால் வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.