அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பழஞ்செட்டித்தெருவில் AFG (ALL FRIENDS GANG) என்ற நண்பர்கள் குழுவினர் ஏழைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.
அதிரையில் சமூக தொண்டுகளை,களப்பணிகளை முன்னிறுத்தி இளைஞர்கள் பல்வேறுவகையில் செயல்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவில் ஆல் ஃப்ரெண்ட்ஸ் கேங்க் என்ற பெயரில் மதபாகுபாடின்றி ஒருங்கிணைந்து நல்லிணக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டிசம்பர் 16 என்பதை தங்கள் குழும நண்பர்கள் தினமாக கொண்டாடிவருகின்றனர்.அன்றைய தினம் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துகின்றனர்.இந்தாண்டு இந்த குழுவினர் சார்பாக அதிரையில் உள்ள ஏழைகளுக்கும்,வறியவர்களுக்கும் உணவுபொட்டலங்களை வழங்கினார்கள்.