Home » தடகளத்தில் சாதனை படைக்கும் பர்வீன்!!!

தடகளத்தில் சாதனை படைக்கும் பர்வீன்!!!

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முஜீப்- ஸலாமத் தம்பதியினர். இவர்களுக்கு ஒரே மகள் ஷமிகா பர்வீன் வயது 14.  அதே பகுதியில் உள்ள பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். 

இவருக்கு பிறவியிலேயே காது கேட்காது.  இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.குறிப்பாக தடகளப் போட்டிகளில் பங்குபெற்று பல வெற்றிகள் பெற்றுள்ளார். 

கடந்த டிசம்பர் 1ந் தேதி முதல் 6ந் தேதி வரை ஜார்கென்ட் மாநிலத்தில் நடைபெற்ற தடகள போட்டிகளில் 

400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு தங்க பதக்கத்தையும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கத்தையும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளார். 

அதன் பின்பு நடைபெற்ற  காது கேளாதோர் பிரிவில் தேசிய அளவில் ஜார்கென்ட் மாநிலத்தில் நடைபெற்ற  போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் பரிசை பெற்று தங்க மெடல் வாங்கியும் புதிய சாதனை படைத்துள்ளார். 

 இதன் மூலம் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஜுனியர் ஒலிம்பிக் போட்டியில் தேர்வாகி உள்ளார்.

இதனையடுத்து  நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரியை சந்தித்து வாழ்த்து பெற்றார்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter