ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபிய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவூதி ரியாத்தில் உள்ள யமாமா அரண்மனையை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் சவூதி அரேபிய ராணுவம் இந்த தாக்குதலை முறியடித்துள்ளது. இதனால் ஏமன் ஹவுதிக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை சவூதி அரசு தீவிரப்படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.