Home » பட்டுக்கோட்டையில் நலம்காக்கும் நடைபயிற்சி விழிப்புணர்வு பேரணி!!!

பட்டுக்கோட்டையில் நலம்காக்கும் நடைபயிற்சி விழிப்புணர்வு பேரணி!!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மாபெரும் நலம் காக்கும் நடைப்பயிற்சி விழிப்புணர்வு பேரணி நடைபெற இருக்கிறது.

பட்டுக்கோட்டையில் 23.12.2017 சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் பேருந்துநிலையம் அருகில் பொதுமக்களுக்கு நடைபயிற்சி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பட்டுக்கோட்டை பகுதியின் சிங்கப்பூர் வாழ் மக்கள்,மனோரா ரோட்டரி சங்கம்,கோட்டை ரோட்னரி சங்கம்,பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம்,மிட்டவுன் ரோட்டரி சங்கம்,லயன்ஸ்,ஜேசிஸ்,விதைகள் அமைப்பு,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,பட்டுக்கோட்டை நடைபயிற்சியளர்கள் மன்றம்,பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலசங்கம் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நீதிபதி இரா.கோவிந்தராஜன்,காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் முன்னிலையில்,பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V சேகர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைக்கிறார்.

பேரணி இறுதியாக பட்டுக்கோட்டை அரசுபிளாசவில் உடல்நலம் காத்தல் குறித்து விழிப்புணர்வும் ஆலோசனைகளையும் மருத்துவர்கள் விவரிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter