Friday, January 17, 2025

ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு தொடங்கியது!!!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன் தொடங்கியது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக 50 இடங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 950 துணை ராணுவப் படையினர் மற்றும் 3300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக தேர்தலை நடத்தும் வகையிலும் வாகுப்பதிவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு இத்தேர்தலின் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர் 24-ந் தேதி) வெளியாக உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

டி.ஆர்.பாலுவுடன் அதிரை அஸ்லம் சந்திப்பு!

அதிரை மேற்கு நகர திமுக செயலாளரும் முன்னாள் சேர்மனுமான அஸ்லம், தனது கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் நல்லுறவை பேணி வருகிறார். அதன் ஒருபகுதியாக...

அதிரையில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும்! எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கை!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம்...

அதிரை அருகே எம்.ஜி.ஆர் நினைவு தினம் கடைபிடிப்பு.!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாம்ராங்கோட்டை வடக்கு ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அனைத்து இந்திய...
spot_imgspot_imgspot_imgspot_img