மதுக்கூர் வழியாக மன்னார்குடிக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.
கீழக்குறிச்சி என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுபாடின்றி அருகே உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்த பயணி ஒருவர் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்,மேலும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.விபத்து நடந்த இடத்தை விட்டு ஓட்டுனரும்,நடத்துனரும் ஓடிவிட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு விபத்துக்குள்ளான இடத்தில் த.மு.மு.க அதிராம்பட்டினம் மற்றும் மதுக்கூர் ஆம்புலன்ஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் முலம் கொண்டு செல்லப்பட்டனர்.20க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
மேலும் இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.பேருந்தின் ஒட்டுனர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திற்க்கு வந்தால் மட்டுமே உடலை எடுக்க விடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்பொழுது அந்த பகுதியில் சற்று பதற்றம் நிலவி வருகிறது.