Home » மாநிலங்களவையில் மறுக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பேசிய சச்சின்!!!

மாநிலங்களவையில் மறுக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பேசிய சச்சின்!!!

by admin
0 comment

மாநிலங்களவையில் முதன் முதலாக பேச சச்சின் வியாழனன்று எழுந்த போது காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டு சச்சின் டெண்டுல்கர் பேச முடியாமல் போனது.

இந்நிலையில் மாநிலங்களவையில் தான் பேசவிருந்ததை சச்சின், சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:விளையாட்டை நேசிக்கும் நாடாக இருப்பதிலிருந்து விளையாட்டை விளையாடும் தேசமாக மாற்றுவதே என் பணி. என்னுடைய இந்த முயற்சியில் அனைவரும் பங்கேற்று என் கனவை நம் கனவாக நிறைவெற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நேற்று உங்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். அதை இப்போது இங்கே செய்கிறேன். என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியது என்பதை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். கிரிக்கெட்டினுள் மழலை அடிகளாக நான் எடுத்து வைத்தது வாழ்நாளின் மிகப்பெரிய மனநினைவுகளைக் கொடுக்கும் என்று நான் உணர்ந்திருக்கவில்லை.

எனக்கு விளையாட்டு ரொம்பப் பிடிக்கும், கிரிக்கெட்தான் என் வாழ்க்கை. என்னுடைய தந்தை பேராசிரியர் ரமேஷ் டெண்டுல்கர், கவிஞர், எழுத்தாளர். நான் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்ய அவர் எப்போதும் ஆதரவளித்து வந்தார். அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு விளையாடுவதற்கான சுதந்திரம், விளையாட்டுக்கான உரிமை, இதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

நாட்டில் முக்கியமான விஷயங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அது நம் கவனத்திலும் உள்ளது. பொருளாதார வளர்ச்சி, ஏழ்மை, உணவுப்பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. என்னுடைய தொலைநோக்கு என்னவெனில் ஆரோக்கியமான இந்தியா என்பதே. 2020-ல் இளம் சராசரி வயது அதிகமுள்ளோர் நாடாக இந்தியா ஆகிறது. ஆனால் ஆரோக்கியமாக இருக்கிறோமா? 75 மில்லியன் பேர் சர்க்கரை நோய்க்கு ஆளாகும் நீரிழிவு நோய் தலைநகராக இருக்கிறது. உடல்பருமனில் 3-ம் இடத்தில் உள்ளது நாடு. இந்த நோய்களின் பொருளாதார சுமை நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

ஐநா அறிக்கையின் படி தொற்றல்லாத நோய்களினால் 2012-2030-ல் 6.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 4,00,00,000 கோடி ரூபாய்கள் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும். எனவே நாம் பயிற்சி செய்து நல்ல உடல் தகுதியுடன் விளையாட்டை ஆடுவோம். இதற்கு, விளையாட்டுத் தேசமாக உருமாற திட்டமிடுதல் அவசியம்.

நம் உடல்தகுதிப் பயிற்சி நேரங்கள் குறைந்து சாப்பிடும் நேரம் அதிகரித்துள்ளது. இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும். மொபைல் போன்களின் இந்தக் காலத்தில் நாம் ‘இம்மொபைல்’ ஆகிவிட்டோம். இந்தியாவை விளையாட்டை ரசிக்கும் தேசத்திலிருந்து விளையாட்டை ஆடும் தேசமாக மாற்றுவோம். இந்தியாவின் 4% மக்கள் தொகை கொண்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிர்வான ஒரு விளையாட்டுக் கலாச்சாரம் உள்ளது. நம் பாக்சிங் லெஜண்ட் மேரிகோம் உள்ளிட்டவர்களை அம்மாநிலம் உருவாக்கியுள்ளது. சமீபத்தில் வலுதூக்குதலில் சாதித்த மீராபாய் சானு, தீபா கர்மாகர், பைச்சுங் பூட்டியா, சங்கீதா சானு இன்னும் பலர்.

விளையாட்டு சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும். ரக்பி உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்காவில் நடத்தி அதனை அனைவரையும் உள்ளடக்கும் நாடாக மாற்றியவர் நெல்சன் மண்டேலா. விளையாட்டு தேசக்கட்டுமானத்தின் தனித்துவமான அங்கம்.

எனவே நாம் நம் நாட்டில் ஒரு ஆரோக்கியமான விளையாட்டுப் பண்பாட்டை உருவாக்க வேண்டும், இல்லையெனில் இளம், உடற்தகுதியற்ற ஆரோக்கியமற்ற இந்தியா ஒரு சீரழிவுதான்.

இவ்வாறு பேசினார் சச்சின் டெண்டுல்கர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter