75
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இன்று(24/12/2017) காலை பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர்(MLA) தலைமையில் MGR நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
அதிரை NO.2 அரசு பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் சென்று அருகே உள்ள MGR உருவ படத்திற்கு மாலை அணுவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் அதிரை நகர செயலாளர் பிச்சை,நகர துணை செயலாளர் தமீம், தமீமுல் அன்சாரி, அபூபக்கர், அஹமது தாஹிர், கே.குமார், எம்.உதயகுமார், அசோக், பாபு, செல்வம், சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.