Home » 77வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் அதிரையில் கோலாகலம்!

77வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் அதிரையில் கோலாகலம்!

by Admin
0 comment

ஒவ்வொரு வீட்டிலும் இந்திய சுதந்திரத்தை கொண்டாட வேண்டும் – முஸ்லீம் லீக் மாவட்ட அரசியல் ஆலோசகர் காசிம் பேச்சு.

இந்திய சுதந்திர தினத்தின் 77வது ஆண்டு இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கோண்டாடப்பட்டு வருகிறது. அதிராம்பட்டினம் இந்திய யூனியம் முஸ்லீம் லீக்கின் சார்பில் அதன் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது அப்போது பேசிய மாவட்ட அரசியல் ஆலோசனை குழு செயலாளர் அதிரை காசீம் மவுலானா பேசுகையில்,  இந்திய சுதந்திரத்திற்கு முழு சொந்தக்கரர்கள் இஸ்லாமியர்கள் தான் என்றும் சுதந்திரத்தை முன்னின்று கொண்டாட தகுதியானவர்கள் இஸ்லாமியர்கள் மட்டும்தான் என்றார்.

விகிதாச்சாரத்திற்கு அதிகமாக இந்திய விடுதலை போரில் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்த சமூகம் என்றும் அன்றைய நமது முன்னோர்கள் சிந்திய ரத்தத்தால் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் நம் முன்னோர்கள் பெற்ற இந்த சுதந்திரத்தை நாம் பேணி காப்பது தலையாய கடமை என்றார்.

சுதந்திர தின உரையை நகர முஸ்லீம்.லீக் செயலாளர் வழக்கறிஞர் இசட் முகம்மது தம்பி நிகழ்த்தினார் இந்திய விடுதலைக்கான போரட்டத்தை முதலில் துவக்கியத்து இஸ்லாமியர்கள்தான் என்றும், இன்றைய அரசியல் சூழ்ச்சிகளை வைத்து கொண்டு சிலர் சுதந்திர தினத்தை கொண்டாட மனமில்லாமல் இருக்கிறார்கள். சுதந்திர போரட்டத்தின் ஒரு பகுதியாக தேவ்பந்த் மதரசா ஒரு மார்க்க தீர்ப்பை அன்று வழங்கியது அதில் ஆங்கிலம் கற்பது ஹராம் என்றார்கள் அதனால் கண்ணியம் மிகு காயிதே மில்லத் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார் அதன் தொடர்ச்சியாக இன்றுவரை சச்சார் கமிட்டி அறிக்கையின் பிரகாரம் இஸ்லாமியர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்து வருகிறார்கள் என்றார்.

இந்திய விடுதலைக்கான போரட்டத்தில் வெள்ளியர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஏராளமான இஸ்லாமியர்கள் இருதிருக்கிறார்கள். நாம் படிக்கும் காலத்தில் பாடப்புத்தகங்களில் திப்புசுல்தான் ஹைதர் அலி, ஹுமாயூன்,செங்கிஸ்கான் உள்ளிடவர்களை பாடப்புத்தகங்களில் படித்தோம், அனால் இன்றைய பாடப்புத்தகங்களில் டெண்டுல்கரை எழுதி வைத்துள்ளார்கள் வரலாற்றை மறைக்கும் யுக்திகளை கையாண்டு வருகிறார்கள் அவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகளின் வாயிலாக நமது முன்னோர்களின் தியாகங்களை எடுத்து செல்ல இயலும் என்றார்.

இந்த சுதந்திர தின கொடியேற்று நிகழ்வில் அதிரை நகர தலைவர்,செயலாளர் மாவட்ட அமைப்ப செயலாளர் உள்ளிட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதிராம்பட்டினம் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றினர் அப்போது பேசிய நகர காங்கிரஸ் தலைவர் தமீம் அன்சாரி இந்திய சுதந்திரத்திற்காக பாடப்பட்ட அனைத்து சமூக மக்களிலும் இருக்கின்றனர் ஆனால் ஆளும் பாஜக அரசு ஒரு சமூகத்தை மட்டும் குற்றப் பரம்பரையாக சித்தரிக்கின்றனர் இதற்கான விடிவு விரைவில் வர உள்ளதாக தெரிவித்தார்.

மமக,தமுமுக சார்பில் இந்திய சுதந்ந்திர தின விழா கொண்டாடப்பட்டது அப்போது பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் நஸ்ரூதீன் பேசுகையில், இந்தியா விடுதலை பெற்று 77ஆண்டுகள் ஆனபின்பும் மீண்டும் ஒரு விடுதலைக்காக மக்கள் ஏங்கி இருக்கிறார்கள் அது 2024ல் நடக்க இருக்கிறது என்றார்.

இதேபோல அதிராம்பட்டினம் நகராட்சி, பள்ளி கல்லூரி, மதரசாக்கள், பள்ளிவாசகள் பள்ளிக்கூடங்கள்.அரசு அலுவலகங்கள் அதிரை பைத்துல்மால் அஞ்சல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறை நிறுவனங்களிலும் இந்த 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter