மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் வாழ்த்துச் செய்தி
தமிழ்நாட்டில் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கபட்ட RK நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக , புதிய சின்னத்தில் போட்டியிட்ட , சகோதரர் TTV_தினகரன் அவர்கள் 39,356வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. தனக்கான அரசியல் பயணத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஆளும் கட்சியையும், எதிர் கட்சியையும் பின்னுக்கு தள்ளி, அவர் இடைத்தேர்தலில் ஈட்டியிருக்கும் அபார வெற்றி தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் அரசியல் சூழ்ச்சிகளை உறுதியாக எதிர்கொண்டு, அதற்கு துணைபோன அதிமுக அரசை துணிச்சலுடன் எதிர்த்தது அவரை மக்கள் செல்வாக்கு மிக்க நபராக உருவாக்கியிருக்கின்றது.
வகுப்பு வாத சக்திகளை துணிச்சலாக எதிர்ப்பவர்களை தமிழக மக்கள் தூக்கி நிறுத்துவார்கள் என்பது RK. நகர் இடைத்தேர்தலில் நிரூபிக்கபட்டிருக்கிறது.
தமிழக மக்களின் பொது மனநிலையை RK. நகர் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.
அந்த வகையில் சகோதரர் TTV. தினகரன் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
திராவிட இயக்கம் வளர்த்து தந்த சமூக நீதி, மதச்சார்பின்மை, தமிழர் நலன் ஆகிய களங்களில் அவர் உறுதியாக பயணிக்க வேண்டும் என்பதை RK.நகர் இடைத்தேர்தல் மூலம் மக்கள் அவருக்கு தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.
அந்த எதிர்பார்ப்பை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு, மீண்டும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது வெற்றி தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்பதில் ஐயமில்லை.