கட்சிக்கு அவப்பெயரும், களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி டிடிவி ஆதரவாளர்களான வி.பி.கலைராஜன், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 5 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தோல்வி குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், வி.முத்தையா, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, மகளிரணி துணை செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..