அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிரையில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கும்,பயணிகளுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை இன்று மாலை காவல்துறை அதிகாரிகள் டெம்போ வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் கொண்டு சென்றனர்.இதனால் பேருந்து நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.