இந்தியாவில் உள்ள ஒரு ஓட்டலில் மூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக புரோட்டாவும் வழங்கப்படுகிறது.
புதுடெல்லி;
புது டெல்லியில் ரோடாக் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது தபாஸ்யா பரோட்டா கடை. பரோட்டாவுக்கு பெயர் போன இந்த ஒட்டலில் ரூ.180லிருந்து ரூ.400 வரை பரோட்டா கிடைக்கிறது .இங்கு செய்யப்படும் 400 ரூபாய் பரோட்டா ஒன்று 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இது போன்ற மூன்று பரோட்டாவை 50 நிமிடங்களுக்குள் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
இதோடு வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு இலவசமாக பரோட்டா தரப்படுகிறது.ஆனால் மூன்று பரோட்டா சாப்பிட முடியாமல் போனால் சாப்பிட்ட வரையிலான பணத்தை வாடிக்கையாளர் கொடுத்துவிட வேண்டும். பலர் இதில் தோற்றுள்ள நிலையில் மகராஜ் சிங் மற்றும் அஷ்வனி ஆகிய இருவர் மட்டுமே இதில் வெற்றி பெற்று ஒரு லட்சத்தை தட்டி சென்றுள்ளனர்.இதில் ஒருவர் 50 நிமிடங்களில் 4 பரோட்டா சாப்பிட்டு வியக்க வைத்துள்ளார். பரிசு சலுகை காரணமாக கடையில் எப்போதும் நல்ல கூட்டம் உள்ளது.