அதிரை எஸ்பிரஸ்; தஞ்சாவூர் மாவட்டம்- தஞ்சையில் கடந்த (25-12-2017) திங்கள்கிழமை அன்று SDPI கட்சியின் வழக்கறிஞர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் SDPI-கட்சி வழக்கறிஞர்களின் மாநில துணைத்தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.A.S. அலாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ADVOCATE திரு.பைசல் அவர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் திரு.முஹம்மது இஸ்மாயில் மற்றும் மாவட்ட துணை செயலாளர் திரு. S. நிஜமுதீன் அவர்களும் மற்றும் நாகை மாவட்டம் துணை செயலாளர் வழக்கறிஞர் திரு.முஹம்மது இலியாஸ் அவர்கள் கலந்துகொண்டார்.
இக்கூட்டம் சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற சனிக்கிழமை (06-01-2018) அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வழக்கறிஞர் அணிகளுடையே SEMINAR ஒரு சட்ட கருத்தரங்கத்தை நடத்துவதற்க்காக திட்டமிட்டு ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பிறகு திருச்சியில் பிப்ரவரி மாதம் இரண்டாவது வழக்கறிஞர் மாநில மாநாடு நடைபெறவுள்ளது என்பதை இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.