தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக நேற்று(27/12/2017) சாலையில் ஆதரவற்ற நிலையில் குளிரில் வாடும் ஆதரவற்றோர், மனநிலை பாதித்தோர், சுமார் 50 பேருக்கு போர்வைகள் வழங்கி உதவி செய்யப்பட்டது. கடற்கரைத்தெரு தர்ஹா வளாகம், மாரியம்மன் கோவில்,பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயனாளிகள் யார் கொடுத்தது என்று அறியாத வண்ணம் போர்வைகள் போர்த்தப்பட்டது. லயன்ஸ் சங்க வட்டாரத்தலைவர் பேரா,செய்யது அகமது கபீர் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். லயன்ஸ் சங்கத்தலைவர் லயன் ஜலீலா முகைதீன் அவர்கள் தலைமையில் சங்கச்செயலர் லயன் சூப்பர் அப்துல் ரகுமான் பொருளாளர் லயன் அப்துல் ஹமீது, மண்டல ஒருங்கிணைப்பாளர் லயன் சாகுல் ஹமீது சங்க உறுப்பினர் கலீல் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.