தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் வருகிற(05/01/1018) வெள்ளிக்கிழமை மதியம் 2மணியளவில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் பட்டுகோட்டை வட்டார உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் நடைபெறுகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் மசோதா என்ற பெயரில் பொலிபெயரால் இஸ்லாமியர்களின் ஷரிஅத் சட்டத்த்தில் கை வைக்கும் இந்துத்துவ போக்கை கண்டித்து இந்த பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் ஷரீஅத் சட்ட வல்லுநர்கள், இஸ்லாமிய அமைப்புகள் சிறந்த பேச்சாளர்களும், சிறப்புரை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுசமயம் இக்கூட்டத்தில் பட்டுகோட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் கலந்துகொள்ளும்படி பட்டுகோட்டை வட்டார உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.