தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் அவர்களுக்காக அரசால் அனுமதிக்கப்பட்ட தினங்களில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் எல்லைக்குள் வந்து அவர்களுடைய சுமார் 5லட்சம் மதிப்பிலான வலைகளை சேதப்படுத்துவதாகவும், இந்நிகழ்வு அடிக்கடி நடைபெறுவதாலும் இதற்க்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு இன்று(28/12/1017) பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V சேகர் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.
இந்நிகழ்வின் போது அதிராம்பட்டினம் அஇஅதிமுக நகர கழக செயலாளர் A. பிச்சை , மீனவர் சங்க தலைவர் கு. பாஞ்சாலன், அஇஅதிமுக நகர துணை M.A.முகமது தமீம் ஆகியோருடன் அதிரை கரையூர் தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு, காந்தி நகர், தரகர் தெரு பகுதிகளின் தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து முறையிட்டனர்.
இதையடுத்து, மீன் வளத்துறை, வருவாய் துறை, கடலோர காவல் படை ஆகியோருக்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவிட்டார்.