அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) இணைந்து, அதிராம்பட்டினம் செக்கடி குளம் நடைபாதை வளாகத்தில் நடைப்பயிற்சி விழிப்புணர்வு முகாமை 29-12-2017 அன்று மாலை நடத்தினர்.
முகாமிற்கு அதிரை FM 90.4 சமூக பண்பலை வானொலி நிலைய நிர்வாக இயக்குநர் ஹாஜி. எம்.எஸ். தாஜுதீன் தலைமை வகித்தார். ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி.எம்.எஸ்.எம்.முஹம்மது அபூபக்கர் முன்னிலை வகித்தார்.
ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் செயலாளர் எம்.எஃப்.முஹம்மது சலீம் வரவேற்புரையாற்றினார். முன்னதாக எம்.எஸ். சஹல் கிராத் ஓதி துவங்கிவைத்தார்.
மாநில அளவில் நடைபெற்ற நடை போட்டியில் முதலிடம் பெற்ற ஹாஜி. Jb எம்.எம்.எஸ். ஏ. சகாபுதீன் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டது.
தொற்றா நோய்கள், உடற்பயிற்சி, நடைபயிற்சி, உணவு முறைகள், பற்றி ஹாஜி.டாக்டர்.எம்.எஸ் .முகம்மது மீராசாகிப், பட்டுக்கோட்டை நடைபயிற்சியாளர் சங்க இணைச்செயலாளர் டி.ரவிச்சந்தர், இயன்முறை மருத்துவர் டி.செல்வசிதம்பரம், பேராசிரியர் ஹாஜி.எம்.ஏ.அப்துல் காதர் ஆகியோர் உரையாற்றினர்.
முகாமிற்கு வந்திருந்த அனைவரும் நடைபயிற்சி செய்தனர்.
அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி நிலைய மேலாளர் வ.விவேகானந்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிரை FM நிர்வாகிகள், ஷம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஹாஜி.ஏ.அப்துல் காதர், துணைத்தலைவர் ஹாஜி.எம்.எஸ்.மன்சூர், ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் துணைத்தலைவர் மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது, என். ஷேக் தம்பி, ஏ.கே.சைபுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் பொறுப்பாளர் பேராசிரியர் ஹெச். சுலைமான் நன்றி கூறினார்.