பல்வேறு பண மோசடிகள் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தனால் தேடப்பட்டு வரும் நபர், இந்தியாவில் அகதியாக இனங்காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய, ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி இலங்கையிலிருந்து படகில், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா மூன்று குழந்தைகளுடன் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர். இவர்கள் கடவுச்சீட்டு தடை சட்டத்தின் கீழ் இந்திய சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.
தற்போது சர்வதேச அரசாங்கத்தின் உதவியுடன் குறித்த அகதிகளை கைது செய்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இந்திய தூதரகம் மூலம் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.