டெல்லி காற்று மாசுபாட்டுக்குத் தீர்வாக பாராளுமன்றக் கூட்டத்தை தென்னிந்தியாவில் நடத்த அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி பாராளுமன்றத்தில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பாக குறுகிய நேரம் விவாதம் நடந்தது. இதில் கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஏ.நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.) ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
அப்போது பேசிய நவநீதகிருஷ்ணன், “டெல்லியில் வசிக்கும் அனைவரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். மனிதர்கள் நீண்ட வாழ்க்கை வாழ முடியாத சூழல் நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் பாராளுமன்ற கூட்டத்தை தென்னிந்தியாவில் மாற்றலாம் என்று நினைக்கிறேன். பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை நாக்பூர், பெங்களூர் அல்லது சென்னையில் நடத்தலாம். இது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.