அதிரை எக்ஸ்பிரஸ் – தஞ்சாவூர் மாவட்டம்:- அதிராம்பட்டினத்தில் ECR சாலையில் திருட்டு சாரா திருமண மண்டபம் எதிரே அமைந்துள்ள ஹசன் ஹார்டவேர்ஸ் என்ற கடை அமைந்துள்ளது.
கடையின் உரிமையாளர்.அபுல் ஹசன் இவர் பல ஆண்டு காலமாக எலக்ட்ரானிக் பொருட்கள் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்றிரவு (29-12-2017) வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கபட்டு கடையின் சட்டர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையில் சுமார் 40,000 ரூபாய் பணம் மற்றும் 3 மின் விசிறிகள் திருட்டபோயிருப்பதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
இத்திருட்டு சம்பவம் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.