திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பகவதி அம்மன் கோவிலின் 117-ம் ஆண்டு விழாவையொட்டி அம்மனுக்கு பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து வழிபாடு செய்தனர்.
மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் சார்பில் பகவதி அம்மன் கோவில் 117-ம் ஆண்டு கால்கோலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான ஞாயிறன்று கரகத்துடன் மூன்றாம் திருவீதி உலா நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதில் திரளானோர் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.