அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்படடினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியகத்தில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (29.12.2017) வெள்ளிக்கிழமை இரவு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை_2 தலைவர் ஜமால் முகைதீன் தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ததஜ வின் மாநில செயலாளர் எம்.எஸ் சுலைமான் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகள் 15 பேருக்கு ஆலிமா பட்டங்கள் வழங்கி பேசியபோது, மாணவிகள் தான் கற்றறிந்த இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறையை முழுமையாக பின்பற்றுவராகவும், பிறருக்கு எத்திவைப்பதில் சிறந்தவராகவும் விளங்க வேண்டும்,என்றார்.
விழாவில்,அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக கல்லூரி முதல்வர் அஸ்ரப்தின் பிர்தவ்ஸி,ததஜ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். விழா முடிவில் கல்லூரி ஆசிரியை நூருல் ஜன்னா நன்றி கூறினார்.
அதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர்இஸ்லாமியக் கல்வியாக ஆசிரியைகள்,மாணவிகள்,பெற்றோர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.