அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் SSMG அணியின் கால்பந்தாட்ட வீரரும்,காதிர் முகைதீன் கல்லூரி அணியின் கேப்டனுமான நசீம் மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
பாரதிதாசன் பல்கலைகழகங்களுக்கிடையேயான போட்டிகளில் முதலிடத்தையும்,ஜோனால் பிரிவுகளில் நான்காம் இடத்தையும் காதிர் முகைதீன் கல்லூரி இடம் பிடித்தது.இந்த போட்டிகளில் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்திய நசீம் மாநிலப் போட்டிகளில் பங்கு பெறும் அணிக்கு தேர்வாகி கேரளாவின் கோழிக்கோட்டில் விளையாடி அதிரைக்கும்,கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.