297
அதிரை எக்ஸ்பிரஸ்:- மாநில அளவில் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வண்ணம் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் முன்னணி கால்பந்து கழகமான AFFA வின் ஜூனியர் அணியும் பங்குபெற்றது.AFFA ஜூனியர் அணியினர் சிறப்பான ஆட்டத்தை ஆரம்பம் முதலே கொடுத்து இறுதியில் 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
அரையிறுதி ஆட்டத்தில் அதிரை AFFA U13 அணி நுழைந்துள்ளது