போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. போயஸ்i தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் காலை 7.30 மணியிலிருந்து நடைபெற்று வந்தன. மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது, பூட்டப்பட்டிருந்த ஜெயலிலதா மற்றும் பூங்குன்றன் அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏராளமான ஆவணங்கள் சிக்கியது என்று வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளது, பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More like this
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...
அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
அதிரை : கூண்டோடு காலியான நாதக – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்...
அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதியின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியின் சீமான் பெரியார் குறித்த...