தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி மரணம் அடையும் அப்பாவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மீது அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் தற்போது வந்துள்ளது, நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஒரே வாகனத்தில் மூன்று முதல் நான்கு நபர்கள் வரை பயணிப்பது, குடித்துவிட்டு போதையில் ஓட்டுவது போன்ற செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.
குடித்துவிட்டு வாகனத்தை ஒட்டி மரணம் ஏற்படுத்தினால் மிக அதிகபட்சமான தண்டனையை கொடுக்க வேண்டும்.
இன்று அதிராம்பட்டினத்தில் ஒரு அப்பாவி இஸ்லாமிய நண்பர் ஸ்கூட்டரில் அமைதியாக சென்று திரும்பும் பொழுது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் கையில் வைத்திருந்த மது பாட்டில்களோடு மிக வேகமாக வந்து அந்த வாகனத்திள மோதி அந்த நண்பர் அங்கே இறந்திருக்கிறார்.
காவல்துறை அதிகபட்சமா அவர்களை கைது செய்து நாளைக்கோ நாளை மறுநாளோ ஜாமினில் விடிவித்து விடும் ,
இறந்துபோன மனிதனுடைய குடும்பத்தை எண்ணி பார்க்க வேண்டும்.
இனி இது போன்ற போக்கிரிகளை காவல்துறை மிகக் கடுமையாக நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரசின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வப்போது சிசிடிவி மூலம் கண்காணித்து அதிக வேகத்தில் செல்லும் இரு சக்கர வாகனங்களுக்கு அப்புறம் அது மிதிக்கவும் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்
.