அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த செய்தியை உரிய ஆதாரத்துடன் பதிந்து இருந்தோம்,மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் நகராட்சியை நோக்கி செல்கிறார்கள் என்ற தகவலையும் பதிந்து உள்ளோம்.
இதனை அறிந்த நகராட்சி ஊழியர்கள், பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று மோட்டார் மூலமாக நீரை வெளியேற்றி உள்ளனர்.
அதிரை எக்ஸ்பிரஸ்சை தொடர்பு கொண்ட தீனுன் நிசா என்ற பெண்மனி இந்த தற்காலிக தீர்வுக்கு நன்றி என்றும், நிரந்தர தீர்வே சரியானது என்றார் வீட்டிற்கு அருகாமையில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வடிகால் பணி முடிவுற்றால் இந்த நிலை நீடிக்காது என்றார்.