அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் திடீரென மெகா பள்ளம் உருவாகியது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த சாலை புணரமைப்பின் போது தற்போது விழுந்துள்ள அதே பகுதி உடைந்து போனது பின்னர் நகராட்சி நிர்வாகம் சமன் செய்து கான்கிரீட் ரோடு அமைத்து இருந்தன, இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையினால் சாலைக்கு அடியில் இருந்த கழிவு நீர் கால்வாயில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதின் விளைவாக மேற்புற மணல்கள் அரிக்கப்பட்டு சாலை கீழே விழ வழிவகை செய்திருக்கிறது.
கிட்டதட்ட 1வாரம் ஆகியும் பாதிக்கப்பட்டு உள்ள அந்த சாலையை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து 12வது வார்டு கவுன்சிலரின் கணவர் சுகைபுதீன் இடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர்தான் பணி நடக்கும் என கூறி இருக்கிறார்.
இதே நேரத்தில்தான் நகராட்சி நிர்வாகம் பல பகுதிகளில் பணிகளை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
24வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கால்வாய்களை மூடியது…
வழக்கு நிலுவையில் இருக்கும் போது இரண்டு தரப்பும் அத்துமீற கூடாது என ஆட்சியர் உத்தரவும் இருக்கிறது அதனையும் மீறி, சர்ச்சைக்குள்ளான இமாம் ஷாஃபி காம்பவுண்டு சுவற்றை இடித்துத்தள்ளி கால்வாய் அமைத்து வருகிறது…
பேருந்து நிலையம் அருகே பாலம் கட்டும் பணியை படு ஜோராக செய்து வருகிறது….
ஆனால் பொறுப்பற்ற கவுன்சிலரின் கணவர் இவ்வாறு கூறி நகைப்புக்கு உள்ளாகி வருகிறார்.
எனவே சம்பந்தப்பட்ட நகர நிர்வாகம் போர்கால அடிப்படையில் பாதிக்கப்பட்டு உள்ள மெகா பள்ளத்தை செப்பணிட்டு மூடித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுமுறை காலம்.என்பதால் சிறார்கள் விளையாடி வரும் நேரத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நகராட் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும்.