2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது.
சமீபத்தில் +2, SSLCக்காண தேர்வு முடிவுகள் வெளியாக பலரும் தேர்வாகி உள்ளனர் அதன்படி அதிராம்பட்டினத்தில் பலரும் தேர்வாகி அடுத்து என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என போதிய கல்வி வழிகாட்டல் இல்லாமல் சிலர் தவித்து வந்தனர்.
அவர்களுக்கென சிறப்பு கல்வி வழிக்காட்டல் நிகழ்ச்சியை நூருல் முகம்மதியா சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.
அதில் சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் அப்துல் ரஷீத் MA கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள், முகல்லா வாசிகள் அனைத்து முஹல்லா மாணவர்கள் கலந்து கொண்டனர்.