ஏரிப்புரக்கரை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் அகமது அஸ்லம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : MSM நகர், KSA லைன் பகுதி ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்ததாகும். அந்த குடியிருப்பு பகுதியில் குப்பை கூளங்களை சரிவர அகற்றுவது இல்லை. சாக்கடை கழிவுநீர், மழை நீர் அந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை விளைவிக்கிறது. குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோருக்கு மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவரிடமும், வார்டு உறுப்பினரிடமும் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவே ஐயா அவர்கள் சமூகம் எதிர்புறக்கரை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற 24.05.24 அன்று காலை 11 மணிக்கு கஸ்டம்ஸ் ரோடு, காலேஜ் முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.