அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயதிற்கு உட்பட்ட MSM நகர் பகுதியில் சமீபத்தில் பெய்த கன மழையினால், தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் நீர் தங்கியது, முட்புதர்கள் நிரம்பிய அந்த காலி மனையின் உரிமையாளர் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றும் பலனில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகர மமகவின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர்,இதன் தொடர்ச்சியாக போராட்ட அறிவிப்பு ஒன்றை நகர மமக அறிவித்து, போராட்டத்திற்கு தயாரானது.
இந்த போராட்டம் குறித்த செய்தியை அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிட்டது, இதனை அடுத்து பட்டுக்கோட்டை BDO மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர் அப்போது முதற்கட்டமாக தேங்கியிருக்கும் நீரை அகற்றி தருவதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்னர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தங்களின் போராட்ட அறிவிப்பை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மமக நகர பொறுப்பாளர்கள், கூறுகையில், அதிகாரிகள் மேற்கூறியுள்ள இடத்திற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருவதாக ஒப்புகொண்டதன் அடிப்படையில் தற்காலிகமாக மமகவின் போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கபடுவதாக தெரிவிக்கின்றனர்.